திருவாரூர்: வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட – 1. சக்திவேல் (வயது-27). த.பெ.களியமூர்த்தி, குடியான தெரு, நிம்மேல்குடி, 2. தினேஷ் (வயது-26 ). த.பெ.ராமகிருஷ்ணன், காலனி தெரு, நிம்மேல்குடி மற்றும் கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட – 3. அருண் குமார் (வயது-34). த.பெ. கருணாநிதி, தில்லை ஸ்தானம், கீழத்தெரு, திருவையாறு ஆகிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.மேலும், அரசு அனுமதியின்றி மணல் திருட பயன்படுத்திய 3 -நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு மணல் திருடிய நபர்களை கைது செய்த வலங்கைமான், கொரடாச்சேரி காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள்.அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.