பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துங்கபுரம் கிராமத்தில் மணல் கொள்ளை நடப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குன்னம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் அங்கு மாட்டுவண்டியில் மணல் ஏற்றிச்சென்ற அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம்,பெருமாண்டிகிராமத்தை சேர்ந்த 1.பாக்கியராஜ் 2.சிற்றரசு 3.பாபு ஆகிய மூவரையும் மாட்டு வண்டியுடன் பிடித்து.
காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்தும் 3 மாட்டு வண்டிகள் மற்றும் ரூபாய் 3000 மதிப்புள்ள மணலை பறிமுதல் செய்தும் மேற்படி குற்றவாளிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி குன்னம் காவல் ஆய்வாளர் திரு. ரவீந்திரன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை