தென்காசி : தென்காசி கடையநல்லூர், அருகே மேல கடையநல்லூர் பள்ளன் குளத்தில் மணல் கடத்தப்படுவதாக கடையநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி காவல் உதவி ஆய்வாளர் திரு. கனகராஜன், தலைமையில் காவல்துறையினர், அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது குளத்தில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி கொண்டிருந்தனர். காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றவர்களை போலீசார் துரத்தி பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் மேல கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டை தெருவை சேர்ந்த சுந்தரபாண்டி மகன் ரவி (23), அதே பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் சந்தன பாண்டி (30), தீயணைப்பு நிலையம் தெருவை சேர்ந்த இசக்கி மகன் முருகன் (40), ஆகியோர் என்பதும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் டிராக்டர்களை திருடி இரவு நேரத்தில் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.