இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரஸ்வதிநகரில் 27.09.2019-ம் தேதி பட்டா நிலத்தில், எவ்வித அரசு அனுமதியுமின்றி மணல் அள்ளிய ராஜசேகர், சேதுராமன், ரவீந்திரன், வெங்கடேஸ்வரன் மற்றும் பூமயில் ஆகியோரை வேந்தோணி குரூப், கிராம நிர்வாக அலுவலர், திரு.கண்ணன் அவர்களது புகாரின்படி காவல் உதவி ஆய்வாளர் திருமதி.சத்யா அவர்கள் U/s 21(ii) Mines and minerals Act-ன் கீழ் கைது செய்து, 02 டிராக்டர் மற்றும் 01 JCB அவற்றை கைப்பற்றினார்.