திருவண்ணாமலை: ஆரணி அருகே ஓதலவாடி செய்யாற்று படுகையிலிருந்து மணல் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து சேத்துப்பட்டு வட்டாட்சியர் பூங்காவனம்,காவல் உதவி ஆய்வாளர் வரதராஜ் ஆகியோர் தலைமையில் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது செய்யாற்று படுகை அருகே சென்று பார்த்தபோது நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் வருவதைப் பார்த்த அவர்கள் அனைவரும் மாட்டு வண்டியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்