கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை பகுதி தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் நாகராஜா. இவர் நேற்றிரவு வெள்ளலூர் – சிங்காநல்லூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 3 யூனிட் கடத்தல் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரியும் மணலும் பரி முதல் செய்யப்பட்டது – இதை கடத்தி வந்த செட்டிபாளையம் பாரதி நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் விக்னேஷ் (வயது 23 )கைது செய்யப்பட்டார்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்