திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் குளங்கள், ஆறுகள் ஆகியவற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. இவற்றைக் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி திரு.ரவளிப்பிரியா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். போலீசார் வராத நேரத்தில் மணல் கடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஆங்காங்கு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மணல் கொள்ளையை தடுக்க கனிமவள துறையும் களத்தில் இறங்கியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் அனுமந்தராயன்கோட்டை அருகே தாமரைக்குளத்தில் மணல் அள்ளிய டிராக்டர்களை தாலுகா காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். போலீசாரை பார்த்ததும் மணல் அள்ளியவர்கள் தப்பி ஓடினார்கள். தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.