திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை போக்குவரத்து காவலர் திரு.சரவணன் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கோவில்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் வந்த நபர் தவறி விழுந்து மயங்கி நிலையில் இருந்துள்ளார். அவருக்கு முதல் உதவி செய்து, பின்பு குடும்பத்தினருக்கு தகவல் அளித்த காவலர் அவர் வைத்திருந்த ஒரு லட்சம் ரொக்கத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். காவலர் திரு.சரவணனின் நேர்மையை கண்டு மணப்பாறை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பாண்டிவேல் அவர்கள் வெகுமதி அளித்து பாராட்டினார்.