கோவை: இருகூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ராம்குமார்(30) நேற்று சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த இளைஞர் ஒருவர் கூடுதலாக பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறி இளம்பெண்களை காண்பித்துள்ளார்.
இதனால் பயந்து போன ராம்குமார் கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நேரில் சென்று புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
.அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது. இதை அடுத்து கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த அரவிந்தக்ஷன் என்பவரின் மகன் அஜித் மோன் (32) மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பினு கண்டப்பா என்பவரின் மகன் மனிஷா (26 )ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அங்கு விபச்சாரத்திற்காக அழைத்து வரப்பட்டிருந்த பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.















