திருவண்ணாமலை : திருவண்ணாமலை மகாதீப விழாவிற்கு வருகைதரும் பக்தர்கள் மற்றம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் அருணை பொறியியல் கல்லூரி இணைந்து TVM பார்க்கிங் www.tvmpournami.in என்ற இணைய பயன்பாட்டை அறிமுகம் செய்துள்ளது. மேலும் TVM பார்க்கிங் இணையப் பயன்பாட்டில் திருவண்ணாமலை நகருக்குள், 58 பார்க்கிங் இடங்கள் ஏற்படுத்தப்பட்டு 12,000 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. தீபத் திருவிழாவின் போது அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச் செல்லவோ அல்லது ஊருக்குச் செல்லவோ விரும்புவோர், திருவிழாக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, இந்த இணையதள அப்ளிகேஷன் மூலம் பார்க்கிங் ஸ்லாட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த இணையப் பயன்பாட்டில் ஒரு ஸ்லாட் ஒதுக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட காலத்திற்கு மக்கள் தங்கள் வாகனங்களை குறிப்பிட்ட ஸ்லாட்டில் நிறுத்தலாம். 06.12.2022 அன்று ஸ்லாட்களை முன்பதிவு செய்ய இந்த இணையப் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், டிசம்பர் 6 ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை மட்டுமே ஊருக்குள் நுழைய முடியும், அதற்குப் பிறகு மக்கள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் (04.12.2022)-ந் தேதி நள்ளிரவு முதல் www.tvmpournami.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.