திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 30.09.2019ம் தேதியன்று புகார் மனு கொடுப்பதற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் அலுவலகம் வந்திருந்தார். கால்கள் இல்லாததை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் இ.கா.ப அவர்கள் தாம் இருக்கும் அறையைவிட்டு புகார் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை தரை தளத்திற்குச் சென்று புகார் மனுவினை படித்து பார்த்து உரிய விசாரணை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைக் பார்த்த பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளரை திரு. அரவிந்தன் இ.கா.ப அவர்களை வெகுவாக பாராட்டினார்கள்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்