மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்களும் கண்டிப்பாக காய்கறி மார்க்கெட்டுகள், மளிகை கடைகள்,காய்கறி சந்தைகள், நியாயவிலை கடைகள்,பெட்ரோல் பங்க் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். மக்கள் வெளியில் அதிகம் நடமாட்டுவதை முற்றிலும் கட்டுப்படுத்தினால் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறுவதை தடுக்கலாம் என்பதற்காகவும் சமூக இடைவெளியை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவும் மக்களுக்காக காவல் ஆணையர் அவர்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.அவர்கள் உத்தரவுப்படி நேற்று 14.04.2020-ம் தேதி திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அனைத்து
காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்து காவல் ஆய்வாளர் திருமதி. மதனகலா மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காவல் ஆய்வாளரை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.