தருமபுரி : தருமபுரி மாவட்டம் ஏரியூர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் நிலைய வளாகம் மற்றும் இரு சக்கர வாகனத்தின் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு போலீசார் சுகாதார பணியில் ஈடுபட்டனர். மேலும் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் பயன்படுத்த கிருமிநாசினி, சோப்பு ஆகியவற்றை வெளியே வைக்கப்பட்டது.