கோவை: கோவை மாநகர் பெரியகடைவீதி B1 காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் திரு தீபன்சக்கரவர்த்தி அவர்களின் கடுமையான பணியின் இடையே Corona தாக்கத்திற்கு உரிய காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உணவுப்பொருட்களை இலவசமாக அளித்து வருகிறார்.
இவர் புகார்களை விசாரிக்கும் தன்மை, வட மாநிலத்தை சேர்ந்த சகோதரர்களிடம் இவர் காட்டும் நிர்வாகத்திறமை, மற்றும் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் இவர் காட்டும் அன்பான உபசரிப்பு, மக்களின் நலனுக்காக இவரின் செயல்பாடு பாராட்டுக்குரியது. அப்பகுதி மக்களின் நன்மதிப்பையும், கோவை மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
இவரைப்போன்ற காவல்துறை அதிகாரிகளை நாம் பாராட்டி அங்கீகரிக்க குடிமக்கள் ஆகிய நம் கடமையாகும் இவரை போன்று நல்லுல்லம் கொண்ட அனைத்து காவல்துறையினர்க்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள்.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்