சென்னை : ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது பழமொழி. இதனை மெய்பிக்கும் பொருட்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, ஆதரவற்றோருக்கு ஆதரவாக, சாலையோரம் தங்கியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற 750 நபர்களுக்கு இரவு உணவாக வெஜிடேபிள் பிரியாணி வழங்கப்பட்டது.
உலகம் எங்கும் கொரானா என்னும் கொடிய அரக்கன் மக்களை கொன்று குவிக்கும் இந்த தருணத்தில், பொதுமக்களை பிணி அண்டாமல், காக்கவேண்டி இரவு பகல் பாராமல் உணவின்றி, உறக்கமின்றி, விழிகளைக் காக்கும் இமைகள் போல சாதாரண குடிமக்களின் வாழ்வாதாரத்தை காக்க போராடி வரும் காவல்துறையினர் அவர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தி, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காவல் உதவி ஆணையர் K.N. சுதர்சனம் அவர்கள் கலந்துகொண்டு, சாலையோரம் வசிக்கும் மக்களை நலம் விசாரித்து உணவு பரிமாறினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம் அவர்கள் சாலையோரம் வசிக்கும் முதியவர்களுக்கு உணவு வழங்கினார். இதனை கண்ட முதியவர்கள் உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம் அவர்களின் பணிவை கண்டு, நெஞ்சம் நெகிழ்ந்த அவர்கள், அவரை மனதார வாழ்த்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு W30, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் K. ஜோதிலட்சுமி, மற்றும் T-12 துணை ஆய்வாளர் திரு.K.சுரேஷ் ஆகியோர் மிகுந்த பணி சிரமங்களுக்கு இடையே உணவு வழங்கல் நிகழ்ச்சியில், ஆர்வமுடன் கலந்து கொண்டு உணவு வழங்கினர்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் ஏற்பாட்டின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் இரவு பகல் பாராமல், ஏழைகளுக்காக சிறப்பாக இப்பணியினை செய்து வருகின்றனர். திரு.முகமது மூசா. இது போன்ற பல்வேறு சமூக சேவையில் ஈடுபடுவது பாராட்டுதலுக்குரியது.
வாழ்க காவலர்கள் ! வளர்க காவல்துறை !