சென்னை: உலகத்தின் இயக்கமே சில மாதங்கள் நின்றதுபோல், சில மாதங்களில் அனைவரது அன்றாட வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது கோவிட்-19 என்று அழைக்கப்படும் கோரானா தொற்றுநோய். ஒவ்வொரு இயற்கை பேரிடர்க்குப்பின் ஒரு அமைதி நிலவும். ஆனால் இன்றோ ஆர்ப்பரிக்காமல் உள்நுழைந்த இந்த கிருமி ஒரு மயான அமைதியையே தோற்றுவித்துள்ளது. இந்த அமைதிக்குள் புதைந்து போனவர்கள் 11,387 பேர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2146 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,48,225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,387 பேர் உயிர் இழந்து 7,18,129 பேர் குணம் அடைந்து தற்போது 18,709 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 577 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,06,024 பேர் பாதிக்கப்பட்டு 3,734 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நோய் தொற்று குறைந்து வருவது மகிழ்ச்சி அளித்தாலும், தொடர்ச்சியான ஊரடங்கால், பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் அநேக மக்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் பிழைப்பை தேடி ஓடி உழைக்கின்றனர். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பசித்தோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இன்று 10/11/2020 செவ்வாய்க்கிழமை, சாலையோரம் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது.
பூந்தமல்லி அம்மா நகர் மற்றும் நசரத்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில், 1000ம் அதிகமான உணவின்றி இருந்த சாலையோர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. டெட் ஆயில் உபயோகப்படுத்தி கைகளைக் கழுவி, சமூக இடைவெளியை ஏற்படுத்தி, முகக் கவசம் அளித்து உணவு வழங்கப்பட்டது.
இதனை துவங்கி வைத்தவர், W-30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் K. ஜோதிலட்சுமி மற்றும் காவலர்கள் S.வச்சலா, T.வேல்விழி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு பரிமாறினார்கள்.
காவல் பணி மிகவும் சிரமமான பணி, அதிலும் பெண் காவலராக பணியாற்றுவது, மிகவும் சிரமமான பணி. அதில் திறம்பட பணியாற்றி வருபவர் திருமதி.ஜோதிலட்சுமி அவர்கள். காவலர்கள் என்றால் பழகுவதற்கு மிகவும் கடினமாக இருப்பார்கள் என்பதுதான் பொதுமக்களின் பொதுவான கருத்து. ஆனால் திருமதி.ஜோதிலட்சுமி பழகுவதில் இனிமை, பணியில் தூய்மை உள்ளம் கொண்டவர்.
மகளிர் காவல் நிலையம் என்றாலே, பெரும்பாலும் காவல்நிலையத்திற்கு வருபவர்கள் குடும்பப் பிரச்சினைகளால் வரும் பெண்களே. அவர்களை அரவணைத்து அவர்களுடைய பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைக்கும் சுபாவம் உள்ளவர் திருமதி.ஜோதிலட்சுமி. அதே நேரத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருபவர். பசித்தோருக்கு உணவுக்கு அளித்து பின் அவரும் சேர்ந்து உணவு அருந்தினார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் இவரின் எளிமையை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.