சென்னை: நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் மாநில தலைவரும், லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை பல்லவரத்தின் தலைவருமான திரு.அசோக் குமார் சாபத் அவர்கள் தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்திற்கு, நேற்று 1000 கிலோ அரிசியை நன்கொடையாக அளித்தார். பின்னர் பார்வையற்றோருக்கு மருத்துவ முகாம் நடத்தி, கொரோனா தடுப்பு வைட்டமின் மாத்திரைகள், முக கவசங்கள் வழங்கி அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையர் திரு.ஆனந்த், துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் திரு.ராஜி பாபு மற்றும் பார்த்தசாரதி (உளவு துறை) ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை விசன் டிரஸ்ட் பலராம் மற்றும் பவித்ரா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.