மதுரை : கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிப்பூர் மாநிலத்தில், மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அதை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசு தான் முழு குற்றவாளி எனவும், பற்றி எரியும் மணிப்பூர் பாஜக அரசே குற்றவாளிகள் எனவும், நேற்று குஜராத் இஸ்லாமியர்கள் மீதான படுகொலை இன்று மணிப்பூர் பழங்குடியின மக்கள் மீதான படுகொலை தொடரும் காவி பாசிசத்திற்கு முடிவு கட்டுவோம் என வாசகங்கள் பொருந்திய விளம்பர பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் நடராஜன் தலைமையில், 15க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட அனைத்து பழங்குடியின மக்களுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும். மணிப்பூர் வன்முறையை தடுக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும், குறிப்பாக இவை அனைத்திற்கும் மத்திய பாஜக அரசே குற்றவாளி என ஏற்றுக்கொள்ள வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுரை அண்ணா நிலையம், திருவள்ளுவர் சிலை அருகே 15 க்கும் மேற்பட்டோர் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி