மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், சமயநல்லூர் அருகே உள்ள தோடநேரி கிராமத்தில், தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்
தலைவர் ஜெய்சங்கர், தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் உலகநாதன்,முன்னிலையில் சிறப்பு விருந்தினர் மாவட்ட கவுன்சிலர் சித்ராதேவிமுருகன், கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில், சளி, இருமல், காய்ச்சல், மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, காது மூக்கு தொண்டை, ஆஸ்துமா, உடல்சோர்வு, உள்ளிட்டவைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளிகளிடம் தொடர்ந்து கூறிய டாக்டர்கள், அரசு மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் தனியார் நிறுவனங்கள் நடத்தும் மெடிக்கல்களுக்கு சென்று மருந்து மாத்திரைகள் வாங்குவது நமது உடலில் தேவையற்ற பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்று ஆலோசனைகளை வழங்கினார். தமிழக அரசு உங்களுக்காக மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டத்தினை செயல்படுத்துகிறது இந்த உன்னதமான திட்டத்தின் மூலம் அனைவரும் பயன்பெற வேண்டும் என்று கூறினர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில், மருத்துவர் சரவணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், உட்பட திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி