சென்னை : சென்னை தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் இன்று 12.02.2020-ம் முதலமைச்சர் பதங்களை இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் திரு. C.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். அதில் பொதுமக்கள் கொடுக்கின்ற புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்க சிரமத்திற்கு ஆளாக்காமல் அன்பாகவும் அனுசரணையாகவும் நடந்துக்கொள்ளவும்¸ விபத்துகளையும், குற்றங்களையும் தவிர்த்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இரயில் நிலையங்களில் அமைந்துள்ள கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும்படி அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கிடவும்¸ காணாமல் போன குழந்தைகள்¸ சிறுவர்¸ சிறுமியர்¸ பெண்கள்¸ வயது முதிர்ந்தவர்கள் ஆகியோர் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்திடவும்¸ ஆதரவற்றோர்களை மீட்டு அவர்களை காப்பகத்தில் சேர்த்திடவும்¸மேலும் இரயிலில் பயணம் செய்யும்போது¸ தவறவிடப்பட்ட மற்றும் களவாடப்பட்ட 2045 செல்போன் வழக்கு பதிவு செய்யப்பட்டு¸ காவலர்களின் சிறப்பான பணியின் மூலம் மீட்கப்பட்டு¸ உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டள்ளது.
இருப்புப்பாதை காவல்துறை தலைவர் திருமதி. V.வனிதா இ.கா.ப அவர்கள் பேசும் போது வெளிமாநிலத்திலிருந்து லட்சகணக்கான பயணிகள் தினசரி தமிழகத்திற்கு வந்துகொண்டு இருக்கின்றனர். அவர்கள் தமிழகத்திற்குள் வரும்போது முதலில் தென்படுவது இருப்புப்பாதை காவல்துறையினரின் செயல்பாடுகளே¸ அச்செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் தான் தமிழக காவல்துறையினரின் நன்மதிப்பு அவர்களிடம் உயர்ந்து நிற்கும்¸ அதற்கு தகுந்தார்போல் நமது நடவடிக்கைகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று காவலர்களிடம் பேசினார்.
திருச்சி இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. T. செந்தில்குமார் அவர்கள், பயணத்தின் போது பயணிகளை பாதியில் இறக்கிவிடாமல்¸ புகார் அளிப்பவரின் பயணம் பாதிக்காத வகையில்¸அவர்களுடனே பயணித்து புகாரை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை