கோவை : கோவை மாநகர் காலப்பட்டி ரோடு L&T பைபாஸ் மற்றும் நகரின் மற்ற பகுதிகளில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு கோவை மாநகர காவல் ஆணையர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் (15/4/2023), ஆம் தேதி காலை 11 மணிக்கு மாநகர காவல் அலுவலர்கள் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திரு.ராம் வேல் உதவி கோட்ட பொறியாளர் தேசிய நெடுஞ்சாலை துறை கோவை திரு ஆறுமுகம் உதவி கோட்ட பொறியாளர் மாநில நெடுஞ்சாலை துறை, திருமதி.சுஜாதா உதவி கோட்ட பொறியாளர் மாநில நெடுஞ்சாலைத்துறை அவிநாசி ரோடு, திரு.சுரேஷ் சங்கரன் நாராயணன், மற்றும் கோவை மாநகர காவல்துறை சார்பில் திரு.மதிவாணன் காவல்துறை ஆணையர் போக்குவரத்து அரசு கூடுதல் காவல்துறை ஆணையர் போக்குவரத்து திட்டம் திரு.ராஜு காவல் உதவி ஆணையர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு திரு. சரவணன் காவல் உதவி ஆணையர் போக்குவரத்து கிழக்கு அருள் முருகன் காவல் உதவி ஆணையர் போக்குவரத்து மேற்கு ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிக விபத்துக்கள் நடைபெறும் பைபாஸ் ரோட்டில் ஏற்கனவே விபத்துகளை தடுக்கும் பொருட்டு ஆய்வு மேற்கொண்டு கோட்ட பொறியாளர் சாலை பாதுகாப்பு திரு.மனுநீதி அவர்களால் வழங்கப்பட்டு பரிந்துரைகள் மற்றும் (12/4/2023) அன்று மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகளை உடனடியாக செயல்படுத்த நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் காளப்பட்டி ரோட்டில் விபத்துக்களை தடுப்பதற்கு பாதசாரிகள் கடக்கும் இடங்களில் பாதுகாப்பற்ற பகுதிகளை கண்டறிந்து அவற்றை மூடுவதற்கும் பாதசாரிகள் கடப்பதற்கான அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான சாலை குறியீடுகள் ஜீப்ரா கிராஸிங் வேகத்தடைகள் அமைப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள திரு.ஆறுமுகம் உதவி கோட்ட பொறியாளர் மாநில நெடுஞ்சாலைத்துறை (கன்ஸ்ட்ரக்ஷன் மெயின்டனன்ஸ்) அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. கோவை மாநகரில் நெடுஞ்சாலை துறை காவல் துறை இணைந்து பாதுசாரிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் விபத்துகளை 100% தடுப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்