சேலம் : தேதி சேலம் மாநகரத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நிகழ்ச்சி லைன்மேட்டில் உள்ள காவலர் சமுதாய கூடத்திலும், KMB திருமண மண்டபத்திலும் நடைபெற்றது. இதில் 256 மனுக்கள் மீது நேரடி விசாரணை மேற்கொண்டு 211 மனுக்கள் மீது விசாரணை முடிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் உயர்திரு.நஜ்முல்ஹோதா இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு மனுதாரர்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். இதில் காவல் துணை ஆணையாளர்கள், வடக்கு திரு.M.மாடசாமி அவர்களும், தெற்கு திருமதி.S.P.லாவண்யா அவர்களும் மற்றும் உதவி ஆணையாளர்களும் கலந்து கொண்டு மனுக்களை விசாரித்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்