கோவை : கோவை மாநகரம் காவல்துறை தலைவர் (பொறுப்பு) திரு.சுதாகர், அவர்கள் உத்தரவின் பேரில் இன்று காலை 10 மணி அளவில் கோவை மாநகர காவல் அலுவலகத்தில் மேளா மனு விசாரணை நடைபெற்றது மனு விசாரணை மேளாவிற்காக கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் இருந்து அதிகாரிகள் விசாரணைக்காக கோவை மாநகர காவல் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர் .மாநகரம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்து வந்த சுமார் 258-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான மனுக்கள் விசாரிக்கப்பட்டது அதில் சுமார் 149 மனுக்கள் இரு தரப்பினரையும் சமரசம் செய்தும் நான்கு மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ப்பட்டது.
31 மனுக்கள் மீது நீதிமன்றங்களை நாடு அறிவுறுத்தியும் இதர விதமாக 26 மனுக்கலும் மற்றும் சுமார் 30 மனுக்கள் மீது மேல்விசாரணைக்காக மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரிடம் ஆவணங்கள் மற்றும் இதர விபரங்கள் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணை மேளாவின் போது திரு.சுதாகர், அவர்கள் பொதுமக்களிடம் நேரடியாக விசாரணை செய்தும் விசாரணை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியும் சைபர் குற்ற பிரிவில் விசாரித்த மனுக்களின் மீது மீட்கப்பட்ட பணம் ரூபாய் 5,58,724/- பாதிக்கப்பட்ட மூன்று மனுதாரர்களுக்கு ஒப்படைத்தார் மேலும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும் பல நாட்களாக நிலுவையில் இருந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்தனர்.
? கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்