திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் “மகிழ்ச்சி திட்டம்” செயல்பட்டு வருகிறது. மன அழுத்தம் மற்றும் பிற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட காவல் ஆளிநர்களை கண்டறிந்து அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் உளவியல் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (24.09.2024) தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று, காவல் ஆளிநர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகளை பார்வையிட்டு, மருத்துவ ஆலோசகர்களுடன் (Medical Counsling) கலந்துரையாடி, மகிழ்ச்சி திட்ட செயல்பாடுகள் குறித்து கேட்டரிந்தார்கள்.