திருவாரூர்: திருச்சி மத்திய மண்டல காவல் ஆளினர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மகிழ்ச்சி என்ற திட்டத்தை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உயர்திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் (02.08.2024) திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். மன அழுத்தம் மற்றும் பிற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட காவல் ஆளினர்களை கண்டறிந்து அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் உளவியல் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கி காவல் ஆளினர்கள்/குடும்ப நலன் காக்கும் வகையில் “மகிழ்ச்சி” என்ற இத்திட்டம் தொடங்கப்பட்டு, தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.
மகிழ்ச்சி திட்ட துவக்க விழாவில் காவல்துறை தலைவர் திரு.நஜ்மல் ஹோடா, இ.கா.ப., அவர்கள் (நலன்), மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.N.காமினி, இ.கா.ப., அவர்கள், தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் திரு.ஜியா உல் ஹக், இ.கா.ப., அவர்கள், திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் திரு.M.மனோகர், இ.கா.ப., அவர்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்களும் கலந்து கொண்டார்கள்.