திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தீண்டாமை உறுதிமொழி ஏற்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் துணைத் தலைவர் ப. அலெக்சாண்டர் செயல் அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் தீண்டாமை உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். உடன் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கவிதா சங்கர், சங்கீதா சேகர், ஜெயலட்சுமி தன்ராஜ், பரிமளா அருண் குமார், ராஜன், ரஜினி, குமாரி புகழேந்தி, மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு