சென்னை: நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த சுந்தரி, வ/24 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், சென்னை, பாடியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது அங்கு பணிபுரிந்து வந்த அரவிந்தகுமார் என்பவரை காதலித்து வந்த நிலையில், அரவிந்தகுமாரின் நடவடிக்கைகள் சரியில்லாததால், சுந்தரி அரவிந்தகுமாரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இதனால், அரவிந்தகுமார் கோபமடைந்து அவரது நண்பர் தனபால் என்பவருடன் சேர்ந்து, காதலிக்கும்போது சுந்தரியும், அரவிந்தகுமாரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியது
தொடர்பாக, சுந்தரியின் தந்தை, W33 மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) புகார் கொடுத்ததின்பேரில், வழக்கு பதிவு செய்து, W33 மாதவரம் AWPS ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, மேற்படி பெண்ணை மிரட்டிய 1.அரவிந்தகுமார், வ/21, கொளத்தூர், 2.தனபால், வ/19, பெரம்பூர், ஆகியோரை கைது செய்து, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.