சென்னை: வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிறுமி, சரத் என்பவர் தன்னை ஆசைவார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில், அவரது தாயாருடன் சேர்ந்து தினமும் அடித்து கொடுமைப்படுத்தாகவும், W13 வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) புகார் கொடுத்ததின் பேரில், W13 வண்ணாரப்பேட்டை AWPS காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, மேற்படி சிறுமியை திருமணம் செய்து கொண்டு அவரது தாயார் தேசம்மாள் என்பவருடன் சேர்ந்து, 15.05.2021 அன்று சிறுமியை தகாத வார்த்தைகளால் பேசி, ஆயுதத்தால் தாக்கியதற்காக, போக்சோ மற்றும் குழந்தை திருமண தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து 1.சரத், வ/28, தண்டையார்பேட்டை, இவரது தாயார் 2.தேசம்மாள், பெ/48, ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.