கடலூர் : தமிழக மகளிர் காவல்துறை பொன்விழா ஆண்டையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் ஆய்வாளர் திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் மகளிர் போலீசார் 100 பேர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளனர். மார்ச் 17-ஆம் தேதி பயணத்தை தொடங்கிய குழுவினர் இன்று 20.3.2023 ஆம் தேதி திங்கட்கிழமை கடலூர் மாவட்ட எல்லையான T.மாவிந்தல் பகுதிக்கு வந்தனர். அவர்களுக்கு கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அவர்கள் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்று சைக்கிள் பயணம் வெற்றி பெற வாழ்த்தினார்.