கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கக்கனூர் – கூசனப்பள்ளி இடைப்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மகளிர் காவலர் எதிர்பாராத விதமாக கட்டுபாட்டை இழந்து விபத்தில் சிக்கினார்.
அதே வழியாக கக்கனூரில் உள்ள ஆரம்ப சுகாதார துணை நிலையத்தை ஆய்வு செய்ய மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்_பிரகாஷ் M.L.A சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கிய மகளிர் காவலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார்.
இப்படி ஓர் சட்டமன்ற உறுப்பினரை இதுவரை கண்டதுண்டா..? என்று பெருமை சேர்க்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. இது அந்த பகுதி மக்கள் இடையே உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்