சேலம் : கருமந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேக்கம்பட்டு பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவருக்கும் அவருடைய சித்தப்பா மகன் தேவேந்திரன் என்பவருக்கும் நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக தேவேந்திரன் மற்றும் அவரது அப்பா ஆண்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து கடந்த (31/3/2016), ஆம் தேதி விவசாய வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தீர்த்தகிரி என்பவரை கொடுவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக கருமந்துறை காவல் நிலைய குற்ற எண் 31/2016, 294, 324, 307 ன் படி காவல் ஆய்வாளர் திரு.சரவணகுமார் அவர்களால், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது ஆத்தூர் சார்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில் சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு (10/07/2023) ஆத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி திரு.ஆனந்தன் அவர்களால், மேற்கண்ட குற்றவாளி தேவேந்திரன் என்பவருக்கும் ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய்.5000/-அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு குற்றவாளியை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் அரசு வழக்கறிஞர் திரு.சிவகுமார் அவர்கள் வழக்கில் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்தார். மேலும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் இ.கா.ப, அவர்கள் தற்போதைய காவல் ஆய்வாளர் திரு.குமரவேல் அவர்களை பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்