திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பழனி பகுதியை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கீதா அவர்கள் விசாரணை மேற்கொண்டு பழனி பகுதியை சேர்ந்த 22 வயதான அப்துல் காதர் என்பவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்படி நபரை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா