திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.கார்த்திகேயன் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.ரமேஷ் மேற்பார்வையில், திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திரு. சுரேஷ், மற்றும் போலீசார் தானிப்பாடி அருகே உள்ள தட்டரனை காட்டுப்பகுதி, தட்டரனை வட்டப்பாறை காட்டுப்பகுதிகளில் சாராய வேட்டை நடத்தினர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சும் ரகசிய இடம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் அழித்தனர்.
மேலும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களையும் அளித்தனர். இதே போல மதுராம்பட்டு மலைப்பகுதிகளிலும் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். இதே போல போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா தலைமையிலான போலீசார் ஜமுனாமரத்தூர் அருகே உள்ள எலந்தம்பட்டு மலைப்பகுதியில் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைவான இடத்தில் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. சுமார் 1,100 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அளித்தனர். மேலும் சாராயம் காய்ச்சிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.