திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி மைதானத்தில் எஸ் .பி. திரு.சீனிவாசன் அனைத்து போலீஸ் வாகனங்களையும் ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக பதவியேற்ற உடன் திரு.சீனிவாசன் போலீசாருக்கு அளிக்கப்பட்டுள்ள வாகனங்கள் நல்ல தரமான நிலையில் உள்ளனவா அவற்றின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பது குறித்து.
இன்று ஆய்வு நடத்தினார் . இதை அடுத்து சீலப்பாடி மைதானத்தில் அனைத்து வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. அவற்றின் டிரைவர்கள் அவற்றை இயக்கிக் தனது வாகனங்களின் எரிபொருள் மற்றும் அனைத்து உதிரிபாகங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். எந்த நேரத்திலும் எந்த இடத்திற்கும் செல்லும் வகையில் நாம் துரிதமாக இருக்க வேண்டும்,என அறிவுறுத்தினார்.















