கோவை: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி திரு.தாமரைக்கண்ணன் நேற்று போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி திரு.தாமரைக்கண்ணன் பேசியதாவது:- அரசின் கொள்கையான போலீஸ் பொதுமக்கள் நல்ல உறவை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறவேண்டும்.. அமைப்பு, சாதி, மத ரீதியான பிரச்சனைகளில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
கோவை நகர மக்கள் மரியாதைக்கு பெயர் பெற்றவர்கள். எனவே போலீசாரும் நகர மக்களிடம் மரியாதையுடனும், மென்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
