திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ” போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பயிற்சி” 27.07.2020 -ம் தேதி திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.எம்.எஸ்.முத்துச்சாமி இ.கா.ப அவர்களால் திண்டுக்கலில் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் இது மூன்று நாள் பயிற்சி ஆகும். 27.07.2020 முதல் 14.08.2020 வரை 5 கட்டமாக இப்பயிற்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு பயிற்சியிலும் 20 நபர்கள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 100 நபர்கள் பயிற்சி அளிக்கப்படஉள்ளனர்.
பயிற்சிக்கு வரும் ஒவ்வொரு காவல்துறையினரும் Thermal scanning மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டும் மற்றும் pulse oxi meter மூலம் ஆக்ஸிஜன் அளவு கண்டறியப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.
இப்பயிற்சியை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பொன்னிவளவன் அவர்கள் வரவேற்றார். சிறப்பு பயிற்சியாளர் டாக்டர் எம்.ஜெயந்தி பயிற்சி அளித்தார். மேலும் ஆய்வாளர் திரு.P.கருப்பையா அவர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அழகுராஜா
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அழகுராஜா