திருநெல்வேலி: நெல்லையில் கடந்த வாரம் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் பேச்சிமுத்து என்பவருக்கு போலீஸ் பேசுவதுபோன்று கால் ஒன்று வந்தது.
பின்னணியில் வாக்கிடாக்கி சத்தத்துடன் போலீஸ் அதிகாரி ஒருவர் நான் எஸ்.ஐ.பேசுறேன் ஆபாசப்படம் பார்த்ததாக உன் செல்போன் ஐபி அட்ரஸும் சிக்கி இருக்கு என்று மிரட்டுவார்.
அந்த இளைஞர் முதலில் பயந்தாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு நான் படம் எல்லாம் பார்க்கலீங்க, வேண்டுமானால் என் செல்போனை பாருங்கள் என்பார்.
“எலேய், பார்காமலா லிஸ்ட்ல உன் பேர் வந்துருக்கு. இன்னார் மகன் தானே நீ உன் வீட்டுக்கு, உன் அப்பாவுக்கு லட்டர் வரும் ஸ்டேஷனுக்கு வா ” என மிரட்டுவார்.
இந்த ஆடியோ வைரலானதை அடுத்து தாங்கள் யாரையும் போனில் கூப்பிட்டு மிரட்டச் சொல்லவில்லை அது வழியும் அல்ல, சம்மன் மட்டுமே அனுப்புவோம் என உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
வாக்கி டாக்கி பின்னணியில் போலீஸ் எஸ்.ஐ.போல் பேசியவர் உண்மையிலேயே போலீஸ்தானா என மறுபக்கம் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. இதில் போலீஸ்போல் மிரட்டியவர் உண்மையில் போலீஸ் அல்ல அவர் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்தது.
அவர் மீது வழக்கு பதிவு செய்த மூன்றடைப்பு காவல்துறையினர் அவர் சென்னையில் இருப்பது தெரிந்து, அவரைப்பிடிக்க சென்னை விரைந்துள்ளனர்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்