சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் 144 தடை உத்தரவு காரணமாக சென்னையை அடுத்த நாவலூர், மாம்பாக்கம் மற்றும் மாகபலிபுரம் பகுதிகளில் மக்கள் அன்றாட உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் சென்னை லயன்ஸ் கிளப் சார்பாக ஒவ்வொரு குடுபத்திற்கும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பை ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பையில், 3 கிலோ தரமான அரிசி, அரை கிலோ பருப்பு, அரை கிலோ எண்ணெய் மற்றும் அரை கிலோ உப்பு வைக்கப்பட்டு, நாவலூரை சேர்ந்த 18 குடும்பத்திற்கும், மாம்பாக்கத்தை சேர்ந்த 50 குடும்பத்திற்கும், மகாபலிபுரத்தை சேர்ந்த 6 குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது. மேலும் தனியார் அமைப்பினால், அளிக்கப்பட்ட 100 உணவு பொட்டலங்களும் வழக்கப்பட்டன.
144 தடை உத்தரவால், வாழ்வாதாரம் இழந்து, தவிக்கும் புறநபர் பகுதி குடும்பத்தினருக்கு தாயுள்ளத்ததோடு அணைத்த, நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் சென்னை மாவட்ட கௌரவ தலைவர் (பொதுகுழு பிரிவு) திரு.அசோக் குமார் சாபத் அவர்களுக்கும் மற்றும் லயன்ஸ் கிளப் சமூக பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.