சென்னை: சென்னை காவல்துறைக்கு நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா, போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் பல்வேறு நலதிட்ட உதவிகள் செய்து வருகிறது.
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா, போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து, கொரானா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முககவசங்கள் மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கலந்து கொண்ட நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் சென்னை மாவட்ட கௌரவ தலைவர் (பொதுகுழு பிரிவு) திரு.அசோக் குமார் சாபத் மற்றும் லயன்ஸ் கிளப் சமூக பணியாளர்கள் இணைந்து சமூக விலகல் குறித்தும், முக கவசங்கள் அணிவதன் அவசியம் குறித்தும், கிருமி நாசினி எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்றும், அடிக்கடி பயன்படுத்த வேண்டும், என்றும் வலியுறுத்தியனார்கள். மேலும் சுகாதாரமான, சத்துள்ள உணவு உண்ண அறிவுறுத்தப்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம், இந்தியாவில் வாழும் ஏராளமான மக்களுக்கு கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகின்றது, நோய் தொற்றாமல் எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது? குறித்து விழிப்புணர்வு செய்தி தினந்தோறும் பரப்பப்படுகின்றது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ துவங்கியுள்ளதால், முக கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் தேவையும் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் இது அன்றாட தேவையாக இருப்பதாலும், மேலும் தற்போது மிக பெரிய பற்றாக்குறை முக கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் ஏற்பட்டுள்ள இந்த வேலையில், நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் சென்னை மாவட்ட கௌரவ தலைவர் (பொதுகுழு பிரிவு) திரு.அசோக் குமார் சாபத் அவர்கள் சமுதாய போராளியாக, பொதுமக்கள், காவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோரை உதவும் விதமாக, சென்னை பெருநகர காவல் துணை ஆணையர்(மவுண்ட்) திரு. பிரபாகர்,இ.கா.ப அவர்கள் திருக்கரங்களால், இந்த புனித பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியினை நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் சென்னை மாவட்ட கௌரவ தலைவர் (பொதுகுழு பிரிவு) திரு.அசோக் குமார் சாபத் அவர்கள் லயன்ஸ் கிளப் குழுவினருடன் ஒருங்கிணைத்தார். மேலும், இந்த மார்ச் மாதத்தில், பல்வேறு நலதிட்ட உதவிகள், பொதுமக்கள் பயன் அடையும் வகையில், நிகழ்த்தப்பட்டன.
சென்னை பெருநகர காவல் உதவி ஆணையர்கள் (பல்லவரம், பூக்கடை, ராயப்பேட்டை, வேப்பரி) மற்றும் பிற பகுதி காவல் நிலையங்களுக்கும் முக கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் விநியோகிக்கப்பட்டது.
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, மாநிலம் மற்றும் மாவட்டம் தோறும் உள்ள குடியுரிமை நிருபர்கள் மூலம் காவலர்களுக்கு உணவு, குளிர் பானங்கள், முக கவசங்கள், கை கழுவ கிருமி நாசனிகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் சென்னை மாவட்ட கௌரவ தலைவர் (பொதுகுழு பிரிவு) திரு.அசோக் குமார் சாபத் அவர்கள், பல ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வருபவர். அவர் செய்யும் சமூக சேவையினால் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் பாராட்டை பெற்று வருகின்றார்.
நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக, இறைவனிடம் பிரார்த்தனை மற்றும் கருணை நடவடிக்கைகள் மூலம் ஒன்றாக இணைந்து சமூகத்தை காத்திட முன்வர வேண்டும்.