சென்னை: உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரசை ஒழிக்க, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தடுப்பு பணிகளில் மருத்துவம், சுகாதாரம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் விதமாக பாரதிதாசன் நகர் கம்பர் 1வது குறுக்கு தெரு ஆலப்பாக்கம் மதுரவாயல் பகுதியில் வசிக்கும் 200 மக்களுக்கு, தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அறிவுறுத்தலின் படி சித்த மருந்து- கபசுரக் குடிநீர் எங்கள் போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக கொடுக்கப்பட்டது.
கபசுர குடிநீர் என்பது, நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்க தரப்படும் சித்த மரபு மருந்து. சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்த, சித்தாவில் இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. சளி, இருமல், காய்ச்சல் ஆகிய அறிகுறிகள்தான் கொரோனா வைரஸ் பாதிப்பிலும் தெரியவருகின்றன. அதனால், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவோ அல்லது அதற்கு மருந்தாகவோ கபசுர குடிநீரைத் தரலாம் என்று நம் தமிழ் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் சித்த மருந்து- கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி பொது மக்கள் ஒருவருக்கொருவர் உரசாமல் தூரத்தை பேணு மாறும், கைகளில் சுத்திகரிப்பு திரவத்தை உபயோக்கும் முறைகளையும் மற்றும் தொற்றுநோய் பரவாமல் இருக்க மூக்கினை மறைக்கும் கவசம் பயன்படுத்தும் முறைகளையும் அறிவுறுத்தப்பட்டது.