சென்னை: சென்னை மாவட்டம், கொரனா வைரஸ் பாதிப்பு தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஊரடங்கு உத்தரவுவால் முடங்கி கிடக்கும் குடும்பங்கள், ஆதரவற்ற நிலையில் இருக்கும் குடியிருப்புவாசிகள், சமைக்க தேவைப்படும் மளிகை பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை.
மேலும் தற்போது விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது. தற்போது அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் ஏழை எளிய நடுத்தர குடும்பங்கள் தவித்து வருகிறார்கள்.
இதனால் ஆலப்பாக்கம் பகுதியில் கடைகள், உணவகங்கள், மருந்து, பால் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூரில் இருந்து வந்து தங்கி, உணவகங்களில் சாப்பிட்டு வேலை செய்து வருவோர், யாசகம் வாங்குவோர், முதியோர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
கோயம்பேடு அருகிலுள்ள ஆலப்பாக்கத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவின்றி தவித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து தகவல் கிடைத்த, உடன், ஆலப்பாக்கம் கம்பர் இரண்டாவது தெரு பகுதியில் தங்கியிருந்த ஆதரவற்ற குடும்பங்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் மூலம் உதவி அளிக்கப்பட்டது.
மளிகை பொருள் வழங்கப்பட்ட விவரம், தலா ஒரு குடும்பத்திற்கு
ஒரு பால் பாக்கெட்
5 கிலோ அரிசி
ஒரு கிலோ துவரம் பருப்பு
ஒரு கிலோ கோதுமை மாவு
கோல்டு வின்னர் ஆயில் ஒரு லிட்டர்
அணில் சேமியா பாக்கெட்
ஒன்றும் அவர்களுடைய உடனடித் தேவைக்காக தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களுக்கு உதவ தயார் நிலையில் உள்ளோம்.
நாட்டின் பதற்றமான சூழ்நிலையில், உங்கள் வீடுகளில் உங்கள் குடும்பத்துடன் சமைத்து உண்ணும்போது பக்கத்து வீட்டிலும் அடுப்பு எறிந்துள்ளதா? என பாருங்கள். தினம் கூலி வேலைக்கு செல்பவர்களின் நிலைமை ஒரு வேளை சாப்பிட கூட வழி இல்லாமல் வீடுகளில் ஒடுங்கி கிடக்கும் நிலைக்கு உள்ளனர். எனவே நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் ஒரு பிடியையேனும் அவர்களுக்கு கொடுத்துதவுங்கள். இந்த நிலமையில் உதவாத நமது மனிதம் வேறு எந்த நேரத்திலும் உதவி பயனில்லை என்ற அடிப்படை அர்த்தத்தை உணர்ந்த, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா அவர்களை பாராட்டுகின்றோம்.