போலீஸ் நியூஸ் சார்பில், ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சென்னை கொளத்தூர் விநாயகபுரத்தில் அமைந்துள்ள சாய் சக்தி பாதுகாப்பு முதியோர் மையம்-த்தில் தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா-வின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் முதன்மை ஆசிரியரான திரு. சார்லஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, குடியுரிமை நிருபர் திரு. அசோக் குமார் மற்றும் திரு. ராஜ்குமார் ஆகியோர் முதியோர் மையத்தில் தங்கியுள்ளவர்களுக்கு அரிசி மூட்டைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர். உதவி பெற்ற முதியவர்கள் தங்களது ஆசீர்வாதங்களை வழங்கி, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர்.
“இல்லாதவருக்கு இயன்றதை செய்வோம்” என்ற மனிதநேயக் கொள்கையை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த நலத்திட்டம், சமூக சேவையின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
















