நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 30.08.2022 அன்று திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட, கண்ணப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருக்க கூடிய 40 மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் சமூக இடைவெளியை ஏற்படுத்தி, சனிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தி, முகக் கவசம் வழங்கி சிற்றுண்டி பின்னர் கல்வி சார்ந்த உபயோகப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியினை ஆவடி காவல் பெருநகர ஆணையரகம் காவல் உதவி ஆணையர் ஆவடி சரகம் திரு.புருஷோத்தமன் அவர்கள் கலந்துகொண்டு 40 குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த உபயோகப்பொருட்கள் வழங்கினார்கள். குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கிய உதவி ஆணையர் திரு.புருஷோத்தமன் அவர்கள், குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினார். கல்வியின் மகத்துவத்தை அவர்களுக்கு புரியும் வகையில் எளிதாக எடுத்துரைத்தார். அவரின் மிகந்த அலுவல் பணிகளுக்கிடையே, நேரம் ஒதுக்கி குழந்தைகளை மகிழ்வித்த திரு.புருஷோத்தமன் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு காலேஜ் பேக், பெரிய நோட்டு 4, கிரையன்ஸ் பனிரெண்டு கலர்கள் உள்ளடக்கிய பேக், பவுச், ஜெல் பேனா, பால் பென் பேனா, பென்சில், ஸ்கேல் , லப்பர், சார்ப்னர், உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின்படி, வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
[embedyt] https://www.youtube.com/watch?v=qHvKWkkChYA[/embedyt]