நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக (12.02. 2022) சனிக்கிழமை அன்று பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்கள் திராவிட முன்னேற்ற கழகம் மதுரவாயில் தெற்கு பகுதி வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் போ.க.சரத் மற்றும் ஸ்ரீபெருமத்தூர் லாயர் அசோசிசன் துணை தலைவர் சசிராஜன் மற்றும் சாம்சன், சந்தோஷ், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, உணவு வழங்கினார்கள்.
மதிய உணவு வழங்கப்பட்ட பகுதி பூந்தமல்லி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் வசிக்கும் சாலையோரம் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு, கைகளை சுத்தப்படுத்தி, சமூக இடைவெளியை ஏற்படுத்தி, முகக் கவசம், வெஜிடபிள் பிரியாணி, வழங்கப்பட்டது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, மாநில வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் உற்சாகத்துடன் உணவு வழங்கினார்கள்.