நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக (12.11.2021) வெள்ளிக்கிழமை இரவு உணவு பூந்தமல்லி பேருந்து நிலையம், மாங்காடு சேக் அப்துல்லா நகர், சாலையோரம் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னின்று கலந்து கொண்டு உணவு வழங்கியவர் பூந்தமல்லி சரக காவல் உதவி ஆணையர் மதிப்புக்குரிய திரு.முத்துவேல் பாண்டி ஆவார்.
உணவு வழங்கும் முன் கைகளை சுத்தப்படுத்தி, சமூக இடைவெளியை ஏற்படுத்தி, முகக் கவசம் வழங்கி, வெஜிடபிள் பிரியாணி உடன் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. பயனடைந்தோர் எண்ணிக்கை 1000 நபர்கள். அனைவரும் வயிறு ஆற உண்டு காவல் உதவி ஆணையர் திரு.முத்துவேல் பாண்டி அவர்களை மனதார வாழ்த்தினர். மிகுந்த மனஉளைச்சலில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள், இது போன்ற நற்காரியங்களில் கலந்து கொள்ளும் போது அவர்கள் மன அழுத்தம் பறந்து போகின்றது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புது பட்டியை சேர்ந்த முத்துவேல் பாண்டி அவர்கள்> சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக 2017 முதல் 2018 வரை பணியாற்றிய போது செய்த சாதனைகள் ஏராளம். கிரிமினல்களையும், குற்றவாளிகளையும் நோட்டமிட்டு பிடிக்கும் வல்லமை கொண்டவர், இவர் பணியாற்றும் பகுதியிலுள்ள தன்னார்வ தொண்டு உள்ளம் கொண்டவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து அப்பகுதி மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையராக இருந்த போது, ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிட ஏற்பாடு செய்தார். இதன்படி காவல் உதவி ஆணையர் திரு.முத்துப்பாண்டி அவர்கள் தலைமையில் கொரானா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில், நுங்கமபாக்கம் பகுதியை சார்ந்த உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு சுமார் 350 அரிசி மூட்டைகள் வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்தவர்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, மாநில வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.