நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 11/11/2021 வியாழக்கிழமை அன்று, போரூர், சிக்னல் மேம்பாலம் அருகில், இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர் மதிப்புக்குரிய SRMC சரக காவல் உதவி ஆணையர் திரு.பழனி அவர்கள் கலந்து கொண்டு 250 க்கும் அதிகமான சாலையோர முதியோர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கினார். இதனை கண்ட முதியவர்கள் உதவி ஆணையர் திரு.பழனி அவர்களின் பணிவை கண்டு, நெஞ்சம் நெகிழ்ந்த அவர்கள் அவரை மனதார வாழ்த்தினர். மிகுந்த பணி சிரமங்களுக்கு இடையே உணவு வழங்கல் நிகழ்ச்சியில், உதவி ஆணையர் திரு.பழனி அவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு உணவு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர் சங்கம் பொதுச்செயலாளர் மதிப்புக்குரிய தேவேந்திரன், மாநில தொழிற்சங்க துணைச்செயலாளர் ஜாபர், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்னேஷ் , ஆகியோர் கலந்து கொண்டனர்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் ஏற்பாட்டின்படி, மாநில வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் இரவு பகல் பாராமல், ஏழைகளுக்காக சிறப்பாக இப்பணியினை செய்து வருகின்றனர்.