நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் ஏற்பாட்டின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா குடியுரிமை நிருபர் பிரிவு வட சென்னை மாவட்ட தலைவர் திரு.அப்துல் ஹாபிஸ் அவர்களால் சென்னை பெரம்பூர் இராஜிவ் காந்தி நகரில் உள்ள தேவையுள்ள எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில் பாக்ஸ், எழுது பொருள்கள் மற்றும் மாணவர்கள் உபயோகப்படுத்தும் பொருட்கள் வழங்கப்பட்டது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா குடியுரிமை நிருபர் பிரிவு வட சென்னை மாவட்ட தலைவர் திரு.அப்துல் ஹாபிஸ் அவர்கள் அப்பகுதியில் சிறந்த முறையில் சமூக சேவையாற்றி வருகின்றார். அன்றாடம் காவல் பணியில் பல இடர்பாடுகளை அனுபவித்துவரும் காவலர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் பாதுகாப்பிற்காக உணவு, குடிநீர் பாட்டில்கள், இனிப்பு மற்றும் முக கவசங்கள் உள்ளிட்ட பல நலதிட்ட உதவிகளை போலீஸ்க்கும் பொதுமக்களுக்கும் வழங்கி வருகின்றார். மேலும் ஒவ்வொரு வருடமும், வீரவணக்க நாள் அக்டோபர் 21 ஆம் தேதி, உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவு அஞ்சலி சுவரொட்டிகளை ஒட்டியும் மற்றும் டிசம்பர் 24 ஆம் தேதி காவலர் தினம் அன்று வருடம் முழுவதும் தியாக உணர்வோடு 24 மணி நேரமும், பணி செய்வதை, உற்சாகப்படுத்தும் விதமாக காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டியும், பூங்கொத்து மற்றும் வருட காலண்டர் ஆகியவற்றை பரிசாக அளித்து வருகிறார்.