தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவ துவங்கி உள்ளதால், நோய் தொற்றை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது.
இதனால், நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவல்துறையுடன் கை கோர்த்து நோய் எதிர்ப்பு திறன் மிக்க கபசுர குடிநீர் வழங்கும் பணி தீவிரமாக செயல்படுத்த நம் அமைப்பினர் களம் இறங்கியுள்ளனர்.
ஆலப்பாக்கம் மெட்ரோ நகர் மற்றும் போரூர் சிக்னல் அருகில், 18.04.2021 நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று, தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் சேர்ந்து அறிவுறுத்திய கொரோனா காய்ச்சலை கட்டுப்படுத்தும் 15 வகை அரிய மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்ட சித்தமருந்து கபசுர குடிநீர் சமூக இடைவெளி வட்டமிட்டு மக்களை வரிசைப்படுத்தி சானிட்டரி உபயோகப்படுத்தி கைகளை சுத்தப்படுத்தி மாஸ்க் அணிவித்து சமூக இடைவெளியை ஏற்படுத்தி கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க கபசுரக் குடிநீர் 1000 ஆயிரம் நபர்களுக்கு வழங்கப்பட்டது.
கொரானா ஊரடங்கில் காவல் உதவி ஆணையர் திரு.பழனி அவர்கள் சிறப்பாக பணியாற்றி, அப்பகுதி மக்களை நோயிலிருந்து பாதுகாக்க, தீவிர ரோந்து பணி, வாகன சோதனை, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலமாக சீரிய முறையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
போரூர் போக்குவரத்து ஆய்வாளர் திரு.பாலமுருகன் பிள்ளை, போரூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.பகவதி அவர்களும் மற்றும் சமூக ஆர்வலர் RTI ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஒலி பெருக்கி பயன்படுத்தி, பொதுமக்களுக்கு கொரானா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சட்டம் ஒழுங்கு காவலர்களும், போக்குவரத்து காவலர்களும், அப்பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று உதவி புரிந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.