தென்காசி : ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் நாள் காவலர் வீரவணக்க நாளாக, இந்தியா எங்கும் உள்ள அனைத்து மாநிலங்களிலும், காவல்துறை சார்பாக மரியாதை உயிர்நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து, அவர்கள் உயிர் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துகின்றனர். உயிர் நீத்த காவலர்களுக்கு காவல்துறையினர் மட்டுமின்றி, பொதுமக்களும் உயிர் இழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்த போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக தமிழகமெங்கும் சுவரொட்டிகள் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 21.10.20 போலீஸ் நியூஸ் பிளஸ் தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அறிவுரையின் படி, ஆலங்குளத்தில் காலை வீரவணக்க சுவரொட்டி ஆலங்குளம் முழுவதும் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது, மாலை 6மணிக்கு வீரவணக்க நினைவேந்தல் நடைபெற்றது, இதில் குடியுரிமை நிருபர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர், மேலும் மலர் இதழ்களை தூவி அஞ்சலி செலுத்தினர், இந்நிகழ்வில் P.S. ராஜா, இமான் ஜேக்கப், காபிரியேல், சுடலைமணி, செல்வம், நீதிதாசன், பொன்சேகர், S. சொரிமுத்து, கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர், இந்நிகழ்வை போலீஸ் நியூஸ் பிளஸ் மாவட்ட செயலாளர் முனைவர் ஞா.ஜோசப் அருண்குமார் ஒருங்கினைத்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடந்த 10 ஆண்டுகளாக காவலர் வீரவணக்க நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, அக்டோபர் 21 உயிர்நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாகவும், டிசம்பர் 24ஆம் தேதி காவலர்களை உற்சாகப்படுத்தும் வகையில் காவலர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காவலர் தினம் டிசம்பர் 24 அன்று பணியில் உள்ள காவலர்களை உற்சாகப்படுத்தும் வகையில், இனிப்புகள் வழங்கியும், மலர்க்கொத்துக்கள் வழங்கி, வாழ்த்து தெரிவிக்கும் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்களின் இச்செயலினை குறித்து ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் பாராட்டு தெரிவித்தனர்.