சென்னை: மேற்கு மாம்பலம் , தி.நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லத்திற்கும் நேற்று உணவு மற்றும் தூய்மைப்படுத்தும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. ஜோஸ்பின் லூர்து மேரி கலந்து கொண்டு ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு வழங்கினார்.
மகிழ்வித்து மகிழ் என்னும் புதுமொழிக்கு ஏற்ப ஒருவனுக்கு எதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று பார்த்தால், ஏழையின் வயிறு நிறையும் போது மட்டுமே. அந்த புன்னகையை கண்டு ரசிக்க மகிழ்வித்து மகிழ்வோம் என்னும் சொல்லை தாரக மந்திரமாக கொண்டு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆதரவற்றோருக்கு ஆதரவாக உணவு மற்றும் அத்தியாவசிய உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றது.
காவல் துறை பணி, மிகவும் சவாலான பணி, அதிலும் பெண் காவல் அதிகாரியாக பணி புரிவது மிக மிகக் கடினம். ஒரே நேரத்தில் குடும்பப் பொறுப்பு, காவல் பொறுப்பு என இரண்டு தலைமை ஏற்று, இரண்டையும் திறம்பட கையாளுவது பாராட்டுதற்குரியது. காவல்துறையினர் மிகுந்த பணிச்சுமையால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு அளிக்கும்போது, கொடுப்பவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. நேற்று மேற்கு மாம்பலத்தில் உள்ள காக்கும் கரங்கள் இல்லத்தில் வசிக்கும் முதியோர் மற்றும் ஆதரவற்ற சிறுவர்களுக்கு காவல் ஆய்வாளர் திருமதி.ஜோஸ்பின் லூர்து மேரி அவர்கள் உணவு வழங்கி மகிழ்ந்தார். காவல் ஆய்வாளர் திருமதி.ஜோஸ்பின் லூர்து மேரி அவர்கள் குற்றவாளிகளிடம் கடுமை, ஆதரவற்றோரிடம் இனிமை கொண்டு பழகக்கூடியவர்.
இந்நிகழ்ச்சியினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் சிறப்பான முறையில் ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர். அனைவரும் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளி விட்டும், உணவு பொருட்களை வாங்கி சென்றனர்.
முதியோர் இல்லத்திற்கு 12 மாதத்துக்கு தேவையான கிருமி நாசினி பொருட்களான சனிடைசர், லைசால் , ஆர்பிக், பினாயில், துணி துவைக்கும் பவுடர், முக கவசங்கள் வழங்கப்பட்டது.
மேற்கு மாம்பலம், அசோக் பில்லர், ஜாஃபர்கான் பேட்டை, ஈக்காடுதாங்கல், கத்திப்பாரா, கிண்டி ஆகிய பகுதிகளில் 700 க்கும் அதிகமான உணவின்றி இருந்த சாலையோர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது.
நம்மால் இயன்றதை செய்து!! பிறரை மகிழ்வித்து மகிழ்வோம்.
[embedyt] https://www.youtube.com/watch?v=1RIpTS04Vhc[/embedyt]